வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (24/09/2017)

கடைசி தொடர்பு:18:08 (02/07/2018)

என்.எஸ்.எஸ் தின விழா: கலாம் நினைவிடத்தில் மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

ராமேஸ்வரம்  அரசு மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சியும், நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு மாணவர்கள் உறுதி மொழி ஏற்கும் விழாவும் நடைபெற்றது.


மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழா கடந்த 1969 ஆண்டு கொண்ட்டாடப்பட்டது. அதனையொட்டி பல்கலை கழகங்கள், கல்லூரிகள், மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களிடையே சேவை மனப்பாங்கை வளர்க்கவும், கிராமங்களின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் நாட்டு நலப்பணித் திட்டம் செப்டம்பர் 24 தேதி தொடங்கப் பட்டது. இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் நாட்டு நலப்பணித் திட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. 

கலாம் நினைவிடத்தில் மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

இதையொட்டி ராமேஸ்வரம் நகரில் உள்ள அரசு பள்ளி, பெண்கள் பள்ளி, வேர்க்கொட்டு புனித ஜோசப் பள்ளி, தங்கச்சிமடம் அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து என்.எஸ்.எஸ். தின விழாவை கொண்டாடினர். டாக்டர். அப்துல் கலாம் மணிமண்டபம் முன்பு நடைபெற்ற உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ரவி தலைமை வகித்தார். மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டாக்டர். ரமேஷ் குமார், ராமேஸ்வரம் அரசு பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள்கள் சிறப்புமுகாமை தொடங்கி வைத்தார். சம்பை கிராமத்தின் தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நுகர்வோர் இயக்க செயலர் களஞ்சியம், ரோட்டரி கிளப் தலைவர் பாலசுப்பிரமணியம், சுடலை, கம்பன் கழக பொருளர் ராமு, ஆசிரியர்கள் பழனிச்சாமி, ஜேம்ஸ் ஆனந்தன், தினகரன், நீலா வேலு, அந்தோனி முத்து, கோபி லட்சுமி, சிராஜுதீன் ஆகியோர் பங்கேற்றனர். திட்ட அலுவலர் ஜெயகாந்தன் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் பசுமை ராமேஸ்வரம் திட்ட ஒருங்கிணைபாளர் சரஸ்வதி தலைமையில் நகராட்சி திருவள்ளுவர் பூங்காவில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.