Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கும் இடத்தை பார்வையிட்ட அமைச்சர்!.

கரூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மைதானத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார்.

 


கரூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் 4-ம் தேதி, திருமாநிலையூர் மைதானத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அந்த மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவரோடு, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வரதராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்து ,விழா நடக்க இருக்கும் மைதானத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கூடவே இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் ,வட்டாட்சியர் சரவணமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் என்.ஆர்.காளியப்பன்,நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,

"எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கரூர் மாவட்டத்தில் மிகச்சிறப்பாக நடத்தப்பட உள்ளது. இதற்கான, அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேல் பங்கேற்க கூடிய விழா என்பதால், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைவரோடு இணைந்து முக்கிய ஆலோசனைகள் உரிய நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement