'டெங்குவை கட்டுப்படுத்த முடியாத தமிழக அரசு விலக வேண்டும்' - கமல் ட்வீட்

சென்னை கோபாலபுரம் பள்ளி மாணவன் டெங்குக் காய்ச்சலால் இறந்தது பற்றி நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் 'டெங்குவை கட்டுப்படுத்த முடியாவிட்டால் தமிழக அரசு விலகிக் கொள்ளட்டும்' என கருத்துத் தெரிவித்துள்ளார். 

கமல் ட்வீட்


நடிகர் கமலஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்த கருத்துக்களைத் தொடர்ந்து விமர்சனம் செய்வதும் ட்விட்டரில் கருத்துக்களைத் தெரிவித்துமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி அவரது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டபோதே ட்விட்டரில்  கருத்து தெரிவித்திருந்தார். அப்போது, 'பள்ளிப் படிப்பை முடிக்காத எனக்கு நீட் தேர்வின் கொடுமை புரியவில்லை. டெங்கு காய்ச்சல் புரியும். டெங்குவால் என் மகள் இறப்பின் விளிம்பு வரை சென்று மீண்டுள்ளார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த முடியாவிட்டால் விலகிக் கொள்ளலாம்' எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவன் பார்கவ் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் கருத்தில் கொண்டு நடிகர் கமலஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் ' செவிடர்களுக்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். டெங்கு மரணம் தவிர்க்க ஆவணம் செய்யா அரசு அகல வேண்டும்' என்றும், 'அரசு தூங்குகிறது, பெற்றோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம் தான். கேள்விக்கான பதிலை பெறாது அமைதியாகக்கூடாது' என்றும் இந்த அரசாங்கத்தைக் கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!