Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை..!

மதுரையில் ஒரே குடும்பத்தைச் 8 பேர் தற்கொலை செய்துகொள்வதற்காக விஷம் அருந்தியுள்ளனர். அதில்  5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
மதுரை மாவட்டம் வண்டியூரையடுத்த குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன், குறிஞ்சிக்குமரன். இருவரும் சகோதர்கள். அவர்களது தாய் ஜெயஜோதி பள்ளியில் தலைமைஆசிரியராக இருந்துவருகிறார்.  வேல்முருகன் மனைவி தேவிபாலா. அவர்ளது மகள் ஜெயசக்தி. குறிஞ்சிக்குமரன் மனைவி தங்கசெல்வி. அவர்களது மகள்கள் ஜெயதாரணி , ஜெயமோனிகா. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வசித்துவருகின்றனர். இந்தக் குடும்பத்தினர், கடை, சீட்டுக் கம்பேனி, நர்சரிப் பள்ளி உள்ளிட்ட தொழில்கள் செய்துவந்துள்ளனர். இந்தநிலையில் அவர்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய சீட்டுக் கம்பெனியில் பணம் போட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், அவர்கள் நேற்று மாலையில் வீட்டிலுள்ள அனைவரும் தற்கொலை செய்துகொள்வதற்காக விஷம் அருந்தியுள்ளனர். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர்களது வீட்டில் விளக்கு எரியாமல் இருந்ததையடுத்து அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வந்து வீட்டில் ஆய்வு செய்தபோது வீட்டிலேயே ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் மட்டும் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

இந்நிலையில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த தேவி பாலா என்பவர் இன்று காலை உயிரிழந்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement