Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில் பயணிகளின் வசதிகள்  மேம்பாட்டு வாரியக் குழு தமிழகம் வருகை


வாரியத்தின் உறுப்பினர்  ஆசிர்வாதம் ஆச்சாரி

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் 13 உறுப்பினர்களைக்கொண்ட குழுவினர், மூன்று நாள் பயணமாக சென்னை சென்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வுசெய்ய வருகின்றனர். ரயில் பயணிகள் தங்களது குறைகளை, கோரிக்கைகளை இந்தக் குழுவிடம் தெரிவிக்கலாம். ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் ஹெச். ராஜா தலைமையில் இக்குழு தமிழகம் வருகிறது. 

அந்தக் குழு, 27.9.2017 புதன்கிழமை- சென்னை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு; 28.9.2017 - வியாழக்கிழமை - திருச்சி, காரைக்குடி மற்றும் மதுரை;  29.9.2017 - வெள்ளிக்கிழமை - ராமேஸ்வரத்திலும் ஆய்வுசெய்ய உள்ளனர். ஆய்வுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட டிவிஷனின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டமும் நடைபெறுகிறது.

இவ்வாரியத்தின் உறுப்பினர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகம் வருகின்றனர். தெற்கு ரயில்வேயின் பணிகள்குறித்து நேரில் கண்டறிந்து, பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க இந்தப் பயணத்தின்போது பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வாரியத்தின் உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி, இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார். அவரும் இந்தப் பயணத்தில் உடன் இருப்பார். இதுகுறித்து ஆசிர்வாதம் ஆச்சாரி கூறுகையில், 'இந்தப் பயணத்தின்மூலம் ரயில் பயணிகளின் குறைகளைக் களைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரயில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப, கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர, இந்தக் குழு முயற்சிசெய்யும்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement