Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் யூகத்தின் அடிப்படையிலேயே அரசியல் நடக்கிறது.! - சொல்கிறார் தமீமுன் அன்சாரி.

'தமிழகத்தில், யூகத்தின் அடிப்படையிலேயே அரசியில் நடந்துகொண்டிருக்கிறது' என்று மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி தெரிவித்தார்.

தமீமுன் அன்சாரி

கோவை கோட்டைமேடு பகுதியில், இன்று மனித நேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சமூக நீதியை மீட்பதுகுறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகிய மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தமீமுன் அன்சாரி, "தமிழர் வாழ்வுரிமை, சமூக நீதி உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க, தேர்தல், அரசியலுக்கு அப்பாற்றப்பட்டு நாங்கள் செயல்படுகிறோம். ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை, அகில இந்திய அளவில் ரத்துசெய்ய வேண்டும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாகப் பலருக்கு பல்வேறு சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால், அவரது கல்லறையைக் காயப்படுத்த வேண்டாம். எங்களுக்கு, ஜெயலலிதா மரணத்தைப் பொறுத்தவரை எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால், சிலரின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சி.பி.ஐ விசாரணை அமைத்தாலும் நாங்கள் வரவேற்போம். ஏனெனில், தமிழகத்தில் யூகத்தைவைத்து அரசியல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக உண்மை வெளிவர வேண்டும். நவோதயா பள்ளிகள் தமிழகத்துக்குத் தேவை. 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். யோகாவை ஒரு உடற்பயிற்சியாக நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதைக் கட்டாயப்படுத்தி திணிக்கக்கூடாது. நடிகர் கமல்ஹாசன் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரிதாரத்தை மட்டும் நம்பி வரக்கூடாது. மக்கள் பணி செய்து வரவேண்டும்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement