Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தேதி மாற்றம்..!

அக்டோபர் மாதம், நாகர்கோவிலில் நடைபெற இருந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தற்போது நவம்பர் மாதம் 8-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், மாவட்டம் தோறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில், இந்தப் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியின் மாவட்டச் செயலாளர் விஜயகுமார் எம்.பி,  செய்துவந்தார். அக்டோபர் மாதம் 16-ம் தேதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க-வினர் செய்துவருகின்றனர். விழாவில் பங்கேற்க, முதல்வர் எடப்படாடி பழனிசாமி 2 நாள் பயணமாக குமரி மாவட்டம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விழா நவம்பர் 8-ம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகத் தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 18-ம் தேதி தீபாவளிப் பண்டிகை. அதற்கு ஒரு நாள் முந்தி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தும்போது, பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கும். எனவே, பொது மக்கள் நலன் கருதி விழா மாற்றி வைக்கப்பட்டுள்ளது. விழா மாற்றிவைக்கப்பட்டாலும் அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. நாகர்கோவிலில், நாகராஜா திடலில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது என்கிறது மாவட்டச் செயலாளர் விஜயகுமார் தரப்பு.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அரசிடமிருந்து சுமார் ஒரு கோடிக்கும் மேல் ஒதுக்கப்படும். அது தவிர, மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்களும் அவரோடு உதவியாளர்களாக இருப்பவர்களும் இதுவரை சுமார் 25 லட்சத்துக்கும் மேல் பலரிடமிருந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வசூல் செய்துவிட்டார்களாம். ஆனால், அந்தப் பணம் போதாததால், இன்னும் அதிகமாக  வசூல்செய்ய இருந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி பணம் வசூல்செய்ய சிரமமாக இருக்கும் என்பதால் விழா தள்ளிப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement