Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லாட்ஜ்களுக்குச் செல்லும் தண்ணீர் லாரியை மறித்த ஊர் மக்கள்..! போராடி மீட்ட காவல்துறையினர்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள மாடுகட்டிவிளையில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து, லாரிகள்மூலம் குடிநீர் எடுத்து கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள லாட்ஜ்களுக்கு சப்ளை செய்யப்பட்டுவருகிறது. கடந்த பல மாதங்களாகவே இந்தச் சம்பவம்  நடந்துவருகிறது. இதற்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். ஆழ்குழாய்க் கிணறுமூலம் தண்ணீர் எடுப்பதால், அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.

அதுபோல, விவசாயம் மற்றும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று பொது மக்கள் தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து லாரிகள் மூலம் தினமும் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டே இருந்தது. இந்த நிலையில், 2 டேங்கர் லாரிகள் தண்ணீர் பிடிப்பதற்காக ஊருக்குள் வந்தது. இந்தத் தகவல் ஊர் மக்களுக்கு கிடைத்ததும் மக்கள் திரண்டு, 2 டேங்கர் லாரிகளையும் தடுத்துநிறுத்திச் சிறைப்பிடித்தனர். மேலும், அந்தப் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி டி.எஸ்.பி வேணுகோபால் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின், பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். தண்ணீர் கொண்டு செல்பவர்கள் தரப்பில் டி.எஸ்.பி-க்கு பணம் கைமாறியதாகவும், அதனால்தான் டி.எஸ்.பி. வேணுகோபால் சம்பவ இடத்துக்கு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அவர், பல வழக்குகளுக்குப் பணம் வாங்கியதால், காவல்துறை சார்ந்த விசாரணையும் டி.எஸ்.பி வேணுகோபால் மீது நடந்துவருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement