Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விவசாயிகளுக்காக பாபநாசம் அணையைத் திறக்க எம்.எல்.ஏ., கோரிக்கை!

பாபநாசம் அணை 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நலனைக் கருதியும், பிசான பருவ சாகுபடியை கருத்தில்கொண்டும் பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி, திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன்இந்தக் கோரிக்கைகுறித்து பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ‘’ தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய  இரண்டு தாலுகா பகுதி மக்களின் முக்கிய தொழிலே விவசாயம்தான். நெல், வாழை, வெற்றிலைதான் இப்பகுதிகளின் முக்கிய விவசாயம். ஸ்ரீவைகுண்டம் அணை மற்றும் மருதூர் அணை ஆகிய  இரண்டு அணைகளிலுள்ள  4 கால்வாய்களின்மூலம் வரும் தண்ணீரை வைத்துதான் விவசாயம் நடக்கிறது. இதில், மருதூர் அணையிலிருந்து கீழக்கால்வாய், மேலக்கால்வாய்மூலம் திறக்கப்படும் தண்ணீரால் 41 வருவாய் கிராமங்களிலுள்ள 31 குளங்களில் தண்ணீர் நிரப்புவதன்மூலம் 20,567 ஏக்கர் பரப்பிலும், ஸ்ரீவைகுண்டம் வடக்கு, தெற்கு கால்வாய்களின்மூலம் திறக்கப்படும் தண்ணீரால் 54 வருவாய் கிராமங்களிலுள்ள 22 குளங்களில் தண்ணீர் நிரப்புவதன்மூலம் 25,557  ஏக்கர் பரப்பிலும் விவசாயம் நடக்கும்.

கடந்த  இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியால், பிசான சாகுபடி முழுமையாக நடக்கவில்லை. இந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. கடந்த ஒரு மாதமாக, நெல்லை மாவட்டத்தில் பரவலாகப் பெய்த மழையால், தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. அதோடு, வரும் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதம் வரை மழை பெய்வது வழக்கம். மழைக்காலத்தில், மழைநீரால் அணையின் நீர்மட்டம் குறிப்பிட்ட அடியைத் தாண்டிவிட்டால், அணையைத் திறப்பது வழக்கம். இப்படித் திறந்துவிடும் தண்ணீரின் பெரும்பகுதி கடலில் வீணாகக் கலப்பது வழக்கமாகிவருகிறது.

எனவே, இந்தக் கால்வாய்களிலுள்ள ஷட்டர்களை செப்பனிட்டு,உடனடியாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், பாபநாசம் அணையின் ஆயக்கட்டு பகுதிகளில் 52 சதவிகிதம் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பகுதியின் பிசான சாகுபடியில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குப் பேருதவியாக அமையும். இதுகுறித்து ஆட்சியருக்கும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளேன் ’’ என்றார்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement