Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 12 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராகக் களமிறங்கியது தி.மு.க!

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 12 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தலைமையைப் பிடிக்காத ஓ.பன்னீர்செல்வம் தனி அணியை ஏற்படுத்தினார். இதையடுத்து, சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 12 பேர் வாக்களித்தனர். இருந்தாலும் முதல்வர் பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனிடையே, முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரைச் சந்தித்து தனித் தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குக் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து, 18 பேருக்கும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பினார். அதில், கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது" என்று கூறப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸூக்கு 18 பேரும் விளக்கம் அளித்திருந்தனர். இந்த விளக்கம் திருப்தியில்லை என்று கூறி மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார் சபாநாயகர். இதற்கு அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து, 18 எம்.எல்.ஏ-களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சபாநாயகர் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்ததோடு, 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடை விதித்து வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட 12 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராகத் தற்போது துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 12 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement