Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதிக்காதது ஏன்?' - சீமான் கேள்வி

'அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதிக்காதது ஏன்' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சத்யம் திரையரங்கில், 'பாடம்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சீமான்

விழாவில் சீமான் பேசுகையில், "கல்வி என்பது மானிட உரிமை, அதைத் தரவேண்டியது அரசின் கடமை. ஆனால், தற்போது எல்லாம் வியாபாரமாக மாறிவிட்டது. எல்லா துறைகளிலும் தனியார் மயம்தான். பிறகு, அரசு எதற்கு இருக்கிறது? ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தனியார் மருத்துவமனைக்குத்தான் சென்றார்கள். ஏன் அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை?

அரசு நடத்தும் மருத்துவமனைமீது அரசுக்கே நம்பிக்கை இல்லை. அரசு மருத்துவமனைக்குப் போயிருந்தால், ஏழு நாள்களிலேயே உயிர் பிரிந்திருக்கும். தனியார் மருத்துவமனையில் சேர்த்ததால்தான் 75 நாள்கள் கழித்து உயிர் பிரிந்துள்ளது. உலகில், எல்லோரும் மருத்துவர், பொறியாளர் ஆகிவிட்டால், யார் நோயாளியாக இருக்கிறது. நீயே படிச்சி, நீயே ஊசி போட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஆங்கிலம் ஒரு அறிவு இல்லை. அது ஒரு மொழி.  மற்ற நாடுகளில் பிச்சை எடுப்பவர்கள்கூட ஆங்கிலம் பேசுவார்கள். ஒரு மொழியைக் கட்டாயப்படுத்தி படிக்கச் சொன்னால், எம் உயிரைக் கொடுத்தாவது அதை எதிர்ப்போம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement