Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரோஹிங்யா படையினரை குற்றம்சாட்டும் மியான்மர் ராணுவம்!

'அராக்கன் ரோஹிங்யா விடுதலைப் படையினர்' என்று அழைக்கப்படும் குழுவினர், 28 இந்துக்களை மொத்தமாகக் கொலைசெய்ததாக மியான்மர் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. 

மியான்மரில் இந்துக்கள் கொலை

மியான்மர்  ரக்கைன் மாநிலத்தில், ரோஹிங்யா இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர். வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாகக் குடியேறியதாக, இவர்களுக்கான உரிமைகளை வழங்க மியான்மர் அரசு மறுத்தது. இந்நிலையில், 2016-ம் ஆண்டு, The Arakan Rohingya Salvation Army (ARSA) என்ற குழு, ரக்கைன் மாகாணத்தில் உருவானது. கடந்த மாதத்தில், ராணுவத்தினரையும் போலீஸ் செக் போஸ்ட்களையும் இந்தக் குழு தாக்கியதைத் தொடர்ந்து, மியான்மரில் வரலாறு காணாத வன்முறை வெடித்தது. 

மியான்மர் ராணுவத்தினர், ரக்கைன் மாகாணத்தில் வசிக்கும் ரோஹிங்யா மக்களைத் தாக்கினர். இதில், ஏராளமானோர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மியான்மர் ராணுவ நடவடிக்கையை சர்வதேச நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துவரும் நிலையில், மியான்மர் நாட்டின் செய்தித்தொடர்பாளர் ஷாக்தே கூறுகையில், ''வடக்கு ரக்கைன் மாகாணத்தில் உள்ள யா பாக்யா என்ற கிராமத்தில், 28 இந்துக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 20 பேர் பெண்கள்.  எட்டு இளைஞர்களில் இருவர் சிறுவர்கள். ஆகஸ்ட் 25-ம் தேதி, இந்த கிராமத்துக்குள் புகுந்து அராக்கன் படையைச் சேர்ந்த 300 பேர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

அராக்கன் விடுதலைப்படையின் செய்தித்தொடர்பாளர், மியான்மர் ராணுவத்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார், ''பிரச்னையைத் திசை திருப்பும் வகையில், பொய் பரப்புரைகளை  ராணுவத்தினர் பரப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மியான்மரில் வசித்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா மக்கள் வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement