Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் அதிக எடையுள்ள பெண் காலமானார்!

Chennai: 

லகில் அதிக எடை உள்ள பெண், இமான் அஹமது அப்துல்லாடி. எகிப்து நாட்டைச் சேர்ந்த 37 வயதான இமான் இன்று அதிகாலை உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார்.

எகிப்து

எகிப்தில் இருந்து கிட்டத்தட்ட 500 கிலோ எடையோடு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார் இமான். அவருக்கு 'பேரியாட்ரிக் சர்ஜரி' (Bariatric Surgery) எனப்படும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், கிட்டத்தட்ட 250 கிலோ வரை எடை குறைந்தார் இமான். ஆனால், எடை குறைப்புக்குப் பிறகு  அவர் மிகவும் மோசமடைந்துவிட்டதாக தகவல் வெளியானது. 

பல்வேறு உடல்நலக் கோளாறு காரணமாக அபுதாபியில் இருக்கும் புர்ஜீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இமான்  காலமானார்.  இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட காரணங்களால் இன்று அதிகாலை (25.9.2017)  நான்கு மணியளவில் அவர் இயற்கை எய்தியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி இவர் தன்னுடைய 37-வது பிறந்தநாளை அவரது குடும்பத்துடன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement