Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாசா, இஸ்ரோ வரிசையில் ஆஸ்திரேலியா தொடங்கவிருக்கும் சொந்த விண்வெளி நிறுவனம்!

விண்வெளி ஆராய்ச்சி

இந்தியாவுக்கு இஸ்ரோ, அமெரிக்காவுக்கு நாசா, ரஷ்யாவுக்கு ராஸ்காஸ்மோஸ் (Roscosmos) போல, உலகம் முழுவதும் 70 நாடுகள் தங்களுக்குச் சொந்தமாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் (Government Space Agencies) உள்ளதாக 2015-ம் ஆண்டின்போது தெரிவித்திருக்கின்றன. இவற்றுள் 14 நிறுவனங்கள், சொந்தமாக ராக்கெட் ஏவும் தளங்களை வைத்துள்ளன. மனிதர்கள் பயணம்செய்வது போல கலங்கள் தயாரிப்பவை 4 நிறுவனங்கள் என்றாலும், அதில் நிலவில் மனிதர்களைச் சரியாக இறக்கிவிடும் வசதிகள்கொண்ட நிறுவனங்கள் 3 மட்டுமே. உலக நாடுகளின் ஒட்டுமொத்த விண்வெளி ஆராய்ச்சித் திறன்களை எண்ணிவிடலாம். ரஷ்யா, சீனா, அமெரிக்கா, தற்போது இந்தியா போன்ற நாடுகள், விண்வெளியில் சாதனைகள் பல புரிந்துகொண்டிருக்கும் நிலையில், மற்றுமொரு முன்னேறிய நாடும் விண்வெளி கோதாவில் இறங்க உள்ளது.

ஆஸ்திரேலியா, தனக்கென நிறைய சாட்டிலைட்கள் வைத்திருந்தாலும், அவற்றை விண்வெளியில் செலுத்த மற்ற நாடுகளின் உதவியைத்தான் இதுவரை நாடிவந்தது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்ற அமைப்பில் (OECD) இடம்பெற்றிருக்கும் 35 நாடுகளில், ஆஸ்திரேலியா உட்பட இரண்டு நாடுகளுக்கு மட்டுமே சொந்தமாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இல்லை. இப்போது, ஆஸ்திரேலியா இந்தக் குறையை நிவர்த்திசெய்யும் வகையில், சொந்தமாக விண்வெளி நிறுவனம் ஒன்றை திறக்க முடிவுசெய்துள்ளது.

தகவல்தொடர்பு, தொலைக்காட்சி, செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் படங்கள், வானிலைக் கண்காணிப்பு மற்றும் ராணுவ செயற்கைக்கோள்கள் போன்ற பயன்பாடுகளுக்காக, இந்தப் புதிய நிறுவனம் செயல்பட உள்ளது. சொந்தமாக விண்வெளி நிறுவனம் என்று ஒன்று இல்லாமலே, தற்போது ஆஸ்திரேலியாவில் 4 பில்லியன் டாலர் மதிப்பில், 11,500 ஆட்களைக்கொண்டு விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement