Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜபக்சே உறவினர்மீது தாக்குதல் நடத்திய வழக்கு: தமிழ் அமைப்பினர் அனைவரும் விடுதலை

ராமேஸ்வரம் வந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மைத்துனர் தாக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேர்கள் இன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சே சகோதரியின் கணவர் நடேசன் திருக்குமரன். இவர்  கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி ராமேஸ்வரம் வந்திருந்தார். அன்றைய தினம் ராமேஸ்வரம் நடுத்தெருவில் உள்ள புரோகிதர் ஒருவரது வீட்டில் நடேசன் பூஜைகள் செய்து கொண்டிருந்தார். இதனை அறிந்த தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் நடேசனுக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவரைத் தாக்கவும் முற்பட்டனர். 

ராஜபக்சே உறவினர் மீது தாக்குதல் நடத்த முயன்றவர்கள் விடுதலை

தகவல் அறிந்து வந்த போலீஸார்  நடேசனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர். பின்னர் நடேசனை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் கண்.இளங்கோ, ம.தி.மு.க நிர்வாகிகள் கராத்தே பழனிச்சாமி, பேட்ரிக், சின்னதம்பி, ஜான்சன், வழக்கறிஞர் டோமினிக் ரவி உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 
ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுதலை செய்து நீதிபதி பிரபாகரன் தீர்ப்பளித்தார். இதையடுத்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement