Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனியாக இருந்த பெண்களைக் கட்டிப்போட்டு நெல்லையில் 100 சவரன் நகை துணிகரக் கொள்ளை!

நெல்லையில் தனியாக வீட்டில் இருந்த தாயையும் மகளையும் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டு 100 சவரன் நகையைக் கொள்ளையடித்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் பிடித்துள்ளனர்.

கொள்ளை நடந்த வீடு

நெல்லை பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள சக்திநகரில் வசித்து வருபவர் பெஞ்சமின் பெலிகான். இவர் மரக்கடை நடத்தி வருகிறார். அவர் கடைக்குச் சென்றுவிட்ட நிலையில் வீட்டில் அவரின் மனைவி மார்சலின், மகள் சுகிமேரி ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். வீட்டைப் பூட்டிவிட்டு அவர்கள் உள்ளே இருந்த நிலையில், பிற்பகலில் மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி இருக்கிறார்கள். 

யார் வந்திருக்கிறார்கள்? எனப் பார்ப்பதற்காக கதவைத் திறந்தபோது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த 4 பேர், வீட்டில் இருந்த பெண்கள் இருவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி கயிற்றால் கட்டிப் போட்டனர். பின்னர், வீட்டில் இருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த 100 சவரன் நகையை எடுத்துக்கொண்டனர். அத்துடன், வீட்டின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்களையும் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மாநகர காவல்துறை துணை ஆணையர் மாலிக் பெரோஸ்கான் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த வீட்டுக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் கைரேகைகளைப் பதிவுசெய்தனர். பாளையங்கோட்டை  குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தினர். 

போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு டோல்கேட் அருகில், கடத்திச் செல்லப்பட்ட கார் ஒன்றை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த ஒரு கொள்ளையனும் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டான். அவரது பெயர் இமான் என்றும் ராமையன்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்ட மேலும் மூவர் குறித்த தகவல் தெரிய வந்திருப்பதால் அவர்களையும் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், வீட்டுக்குள் நுழைந்து பெண்களைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பாளையங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement