பவானி கூடுதுறை காவிரி மகாபுஷ்கர விழா

டந்த செப்டம்பர் 2-ம் தேதி குருபெயர்ச்சி நடைபெற்றதால், குரு பகவான் கன்னி  ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஜோசிய வல்லுநர்கள் கூறுகின்றனர். துலாம் ராசிக்குரியப் புண்ணிய நதி காவிரியாகும். இத்தகைய காலகட்டத்தில் காவிரியில் புனித நீராடினால் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

காவிரி புஷ்கர விழா

இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வில் நீராடினால் 12 கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பலனையும், 12 கும்பமேளாவில் கலந்து கொண்ட புண்ணியமும் கிடைக்கும் என்பது ஐதிகம். ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் காவிரி கரையோரம் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் ஆலயத்தில் செப்டெம்பர் 20 முதல் 24 வரை வெகுவிமர்சையாக காவிரி புஷ்கர விழா நடைபெற்றது. வெளியூர் மட்டுமல்லாமல் வெளி நாட்டில் இருந்தும் மக்கள் வந்து தரிசனம் செய்தனர். கடந்த 5 நாள்களில் கிட்டத்தட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர் என்று கூறப்பட்டுள்ளது.

20.09.2017 புதன்கிழமை அன்று கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை புனித நீராடு்தலும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் 5 நாள்களின் மாலைதோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 20.09.2017 அன்று இசை நிகழ்ச்சியும் 21.09.2017 அன்று பரத நாட்டிய நிகழ்ச்சியும், 22.09.2017 அன்று தேசமங்கையர்க்கரசியின் சொற்பொழிவும், 23.09.2017 அன்று சுகிசிவத்தின் சொற்பொழிவும், 24.09.2017 ஈஷா மையத்தின் சம்ஸ்க்ருதியின் கலை நிகழ்ச்சி மற்றும் காவிரி பாதுகாப்பு கருத்தரங்கமும் நடைபெற்றது.

பவானி கூடுதுறை


காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுக்கும் விழா:
விநாயகர் வேள்வியுடன் மாலை 6.30 மணி அளவில் காவிரிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி தொடங்குகிறது. 7 மணி அளவில் 9 பேர்களுடன் தீபாராதனைத் தொடங்குகிறது. மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு, தூபம், ஒற்றை தீபம், நெய் வேத்யம், நீர் வழங்குதல், அடுக்கு தீபம், நாக தீபம், சூர்ய சந்திர தீபம் போன்றவை வரிசையாக நடைபெற்றது. பின்னர், வெண்சாமரம் (விசிறி) வீசப்பட்டு, மீண்டும் மலர் அர்ச்சனை செய்யப்பட்டு, கற்பூர தீபாராதனை காட்ட காவிரிக்கு ஆரத்தி எடுக்கும் விழா நிறைவடைகிறது.

கடைசி 2 நாள்களில் மக்கள் நெரிசல் அதிகமாக இருந்ததால், போலீஸார் பாதுகாப்புப் பணியில் அதிகளவு ஈடுபட்டனர். மக்கள் கூட்டத்தில் பவானி நிறைந்தமையால் வாகன நெரிசல் ஏற்பட்டது, இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல், பொதுமக்களுக்கும் மிகுந்த அவதி ஏற்பட்டது. 3 கிலோ மீட்டர் தொலைவுக்குப் போக்குவரத்து தடை ஏற்பட்டதால் பக்தர்களும் அவதிப்பட்டனர். கோயிலின் உள்ளே காவல் பாதுகாப்பு மையம், மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் வசதி போன்றவை முறையாகச் செய்யப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!