Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நிறங்களில் பல அரசியல் உள்ளன'- ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேச்சு

Coimbatore: 

நேர்மை மக்கள் இயக்கம் மற்றும் பதியம் இலக்கிய அமைப்பு சார்பில் ஓவியர் புகழேந்தி எழுதிய ‘நானும் எனது நிறமும்’ நூல் வெளியீட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு, " இங்கு படைப்பாளிகள் தங்களின் புத்தகங்களை விற்பனை செய்ய பெரும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. வாசிப்பு என்பதைப் பொறுத்தவரை நாம் செல்ல வேண்டிய தூரமும் இன்னும் நிறையவே இருக்கிறது. ஏழரை கோடி தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் புத்தகம் வாசிக்க இத்தனை பஞ்சம் உள்ளதே அதற்கு மிக முக்கிய காரணம். அதை நாம் மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும். அந்த வகையில் புத்தகங்களுக்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஓவியர் புகழேந்தி இந்நூலின் தலைப்பில், ' நானும் எனது நிறமும்' என்றுதான் கூறியுள்ளாரே தவிர, அது என்ன நிறம் என்று கூறவில்லை. இன்றைக்கு நிலவும் சூழலில் ஒருவர் தன்னுடைய நிறம் கறுப்பு என்று கூறுகிறார்.  ஆனால், சிலர் அவருக்குள் காவி இருப்பதாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், கறுப்பில் அனைத்து வண்ணங்களும் உள்ளன. நிறங்களிலே பல அரசியல் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வறுமையின் நிறம் சிவப்பு என்பதையும் நாம் உணர வேண்டும். ஓவியம், எழுத்து, இலக்கியம் போன்றவைகளுக்கு சமுதாயத்தை மாற்றும் தன்மை இருக்கிறது. இன்றைக்கு ஓவியத்தைப் பார்த்து நாட்டில் பலரும் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. ஓர் ஓவியரைப் பார்த்து நாடே அச்சப்படுகிறது என்றால் ஓவியத்தின் சக்தியை சற்று எண்ணிப்பாருங்கள்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement