வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (25/09/2017)

கடைசி தொடர்பு:18:43 (25/09/2017)

’ஓ.பன்னீர்செல்வம் போன்ற அரசியல்வாதிகள் தேவையில்லை!’ - பொளேர் மக்கள் கருத்து #VikatanSurveyResult

அரசியல்

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில், கடந்த 20-ம் தேதி பள்ளிக்கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,"எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை, ஆசிரியர்களாகிய நீங்கள்தான் உருவாக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். இதையடுத்து, "ஓ.பன்னீர்செல்வம் போன்ற நல்ல அரசியல்வாதிகள் தமிழகத்துக்கு அவசியமா" என்ற தலைப்பில் 'விகடன்' இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. சர்வேயில் கலந்துகொண்டவர்கள் தற்போதைய அரசியல் தலைவர்கள் பற்றிய தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு மக்கள் அளித்த பதில்களும் கீழே...

விகடன் சர்வே முடிவுகள்

விகடன் சர்வே முடிவுகள்

விகடன் சர்வே முடிவுகள்

4. உண்மையில் அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்? அவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்பதை ஓரிரு வரிகளில் தெரிவிக்கவும்.

*They should be reliable and loyal to people

*பதவிக்காகப் பச்சோந்திகளாக மாறாத அரசியல் கொள்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

*They should not be selfless. Should be like kamaraj or kakan

*தத்துவத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டும். 

*மண்ணையும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசிப்பவர் இந்த மண்ணை ஆள வேண்டும்.

*kandipaga ops agavo eps agavo irukka kudathu

*மக்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள்,  தம்மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கும் அவர்கள் வாங்குகிற சம்பளத்துக்கும் உண்மையாக வேலை பார்த்தாலே போதும்.

*அரசியல்வாதிகள் வைகோ போன்று நேர்மையாக மக்களுக்கு உழைக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

*மக்களுக்குச் சிறப்பான முறையில் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில், மாதம் ஒருமுறை தமது தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகாண முற்பட வேண்டும்.

*Makkal nalan sarnthu mattrum maanila urimaikalukaga mathiya arasidam poraduvathu

*மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். முக்கியமாக ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல் மக்கள் போராடிக்கொண்டிருக்கும்போது நீங்கள் விழா கொண்டாடிக்கொண்டு இருக்கக் கூடாது.

*தகுதியும் திறமையும் உள்ள கட்டுக்கோப்பான தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும். 

*அரசியல்வாதிகளுக்கு சுய ஒழுக்கம் முக்கியம்....

*ஊழல் செய்து மக்களை ஏமாற்றி அடிமைகளாக நடத்துபவர்கள் வேண்டாம்.

*Who can mingle with common people and understand the need of all segments, need to weed out the corruption, focus and employment Oppertunity and manufacturing and service industry development, good roads and basic amenities and clean living admosphere

*பொதுநலத்தில் உண்மையான அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

*அரசியல்வாதிகள் சாதாரண மக்களைப்போல் திங்கள் முதல் சனிக்கிழமைவரை அலுவலகம் வந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்த்தால்தான் நமது மாநிலம் வளர்ச்சி அடையும்.

*Ivaramari arasiyalvathikalai makkal Thooki yeriyanum, Epd irka kudatha enbatharku EPS &OPS oru Nalla utharanam

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றைப் பின்னூட்டமாக இடுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்