சென்னையில் 3 வயது குழந்தைக் கடத்தல்!

சென்னையில் 3 வயது குழந்தைக் கடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தல்

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இனியாஸ் என்பவரின் 3 வயது குழந்தையை மர்மநபர் ஒருவர் கடத்திவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று வயதான முகமது சாது என்ற குழந்தை வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் கடத்தியதாகக் கூறப்படுகிறது. அத்தெருவில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவைக்கொண்டு ஆர்.கே.நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனை மற்றும் தெருக்களில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!