Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லை பல்கலைக்கழகம் முற்றுகை: மாணவர்களுடன் போலீஸார் தள்ளுமுள்ளு!

முற்றுகை போராட்டம்

தேர்வுக் கட்டண உயர்வை ரத்துசெய்யக் கோரி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தின்போது, மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள சுமார் 100 கல்லூரிகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கு மாணவர்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்தத் தேர்வுக் கட்டண உயர்வை ரத்துசெய்யக் கோரி பல்வேறு கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், கட்டண உயர்வை திரும்பப் பெற பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது.

சாலை மறியல்

இதனால் தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி, ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் முன்பாகத் திரண்டனர். அவர்கள் ஊர்வலமாகச் சென்று பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயற்சித்தனர். இதைப் போலீஸார் தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பின்னர், மாணவர்கள் சாலையின் நடுவில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. மாணவர்கள் உடனடியாக அதற்கு வழிகொடுத்துவிட்டு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை-தென்காசி சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. பின்னர், பல்கலைக் கழக நிர்வாகம், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. அதன் பின்னரே மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement