Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவர் விடுதியை நொறுக்கிய 16 பேர் திருப்பூரில் கைது..!

Coimbatore: 

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி விடுதிக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்ட16 பேரை திருப்பூர் போலீஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

திருப்பூர் மாநகர வடக்கு காவல்நிலைய எல்லைக்குள் செயல்பட்டு வரும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், அரசுக்குச் சொந்தமான  மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. சிக்கண்ணா கல்லூரியில் பயிலும் பல வெளியூர் மாணவர்கள், இந்த விடுதியில் தங்கி பயிலும் நிலையில், இந்த விடுதி மாணவர் ஒருவருக்கும், அதே கல்லூரியில் பயிலும் மற்றொரு மாணவருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டிருக்கிறது. கல்லூரி நிர்வாகம் தலையிட்டு அந்தப் பிரச்னையை முடித்து வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம், அம்மாணவர்களுக்கு இடையேயான பிரச்னை தொடர்பாக வெளியாட்கள் சிலரை அழைத்துக்கொண்டு வந்த கல்லூரி மாணவர்கள் சிலர், சம்பந்தப்பட்ட விடுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். விடுதியில் தங்கியிருந்த மாணவர்களின் மடிக்கணினி உட்பட பல்வேறு சாதனங்களை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்த விடுதி சமையல்காரர் ஒருவரையும் தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர் விடுதி காப்பாளர் அரிச்சந்திரன் என்பவர், சம்பவம்குறித்து திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில்,  சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் விடுதிக்குள் நுழைந்ததாக சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் 4 பேர் உட்பட 16 பேரை கைதுசெய்தது காவல்துறை. பின்னர் அவர்கள் அனைவரும் திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement