Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈரோட்டில் மஞ்சள் விலை வீழ்ச்சி!

மஞ்சள் மாநகர் என்று வர்ணிக்கப்படும் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சளுக்கான விலை குறைந்துள்ளதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், தா.மா.க மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், தா.மா.க மாநில விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாயிகள் அணித் தலைவர் புலியூர் நாகராஜ் கூறுகையில், ''மஞ்சள் நகரம் என வர்ணிக்கப்படும் ஈரோட்டில் மஞ்சளுக்கான விலை குறைந்துள்ளதால் மஞ்சள் வீதிக்கு வந்துள்ளது. ஒரு குவிண்டால் மஞ்சள் 12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஒரு குவிண்டால் 6,000 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஈரோட்டில் வறட்சியின் காரணமாக மஞ்சள் சாகுபடி வெகுவாக குறைந்த நிலையில் மஞ்சள் விலை குறைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொருள் அதிகமாக விளைந்து சந்தையில் குவிந்திருந்தால் அதன் விலை குறையும். ஆனால், மஞ்சள் சாகுபடி குறைந்து சந்தையில் மஞ்சள் பற்றாக்குறையாக இருக்கும்போது மஞ்சளின் விலை குறைந்திருக்கிறது.

இதற்குக் காரணம் மஞ்சள் வர்த்தகர்களும், வியாபாரிகளும் பேசி வைத்துக்கொண்டு விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஈரோட்டில் அரசு மஞ்சள் வணிக வளாகங்கள் மூன்றும், தனியார் மஞ்சள் வணிக வளாகம் ஒன்றும் உள்ளது. ஈரோட்டில் ஒரு இடத்தில் ஒரு மஞ்சள் வணிக வளாகம் இருக்க வேண்டும் என்றும், மஞ்சளுக்கான விலை நிர்ணயத்தை அரசுதான் தீர்மானிக்க வேண்டும்'' என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா, ''தமிழக அரசின் அலட்சியப் போக்கால் மஞ்சள் விலை குறைந்துள்ளது. இதனால் மஞ்சள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மஞ்சளுக்கான விலையை அரசுதான் தீர்மானிக்க வேண்டும். நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு கலந்ததால் அதன் பாசனப் பகுதிகளான கொடுமணல், சென்னிமலை, கொடுமுடி போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களும், மனிதர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பொறுப்புடன் செயல்பட வேண்டிய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தன் பதவியை மறந்து சாயப்பட்டறை முதலாளிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். ’மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது’ என்று கூறுகிறார். இதுபோல கடமையை உணராமல் செயல்படக் கூடியவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பவானிசாகர் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக கலெக்டரை சந்திக்க வந்திருக்கிறோம்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement