Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அலெக்சாண்டர் மின்சின் நினைவு தினம்: நாம் தமிழர் கட்சியினர் மரியாதை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்தின் உயிராக விளங்குவது பேச்சிப்பாறை அணை. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் மூலமாகத்தான் குமரி மாவட்டத்தில் இரு போக சாகுபடிகள் நடக்கின்றன. இந்த அணை 1869-1906-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டி 111 ஆண்டுகள் ஆன பின்னரும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த அணையைக் கட்டியவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் ஹம்ப்ரே அலெக்சாண்டர் மின்சின். இவர் இங்கிலாந்து நாட்டின் ஐரீஸ் பகுதியில் 1868-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி பிறந்தார். 1913-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி காலமானார்.

பொறியாளர் ஹம்ப்ரே அலெக்சாண்டர் மின்சினின் தந்தை ஜாண் வில்லியம் மின்சின், ஊட்டியில் தேயிலைத் தோட்ட அதிகாரியாக பணியாற்றினார். அலெக்சாண்டர் மின்சின் பொறியியல் படித்து முடித்தவர். எனவே, மகனை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வில்லியம் மின்சின் அழைத்து வந்தார். இந்தியா வந்ததும் மதுரையில் அரசாங்கப் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை கட்டத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கான திட்டமும் உருவானது. இதற்கு அலெக்சாண்டர் மின்சின் பொறியாளராக நியமிக்கப்பட்டார். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் அருகே அவருக்குப் பங்களாவும் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து பேச்சிப்பாறை அணை கட்டுமானப் பணிகளைக் கவனித்து வந்தார். 1906-ம் ஆண்டு அணை கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டது. மொத்த நீளம் 425.51. அதோடு அணையிலிருந்து தண்ணீர் செல்ல தோவாளை மற்றும் கோதையாறு சானல்களையும் உருவாக்கினார். இதனால் குமரி மாவட்டத்தின் கடைவரம்பு நிலங்களும் பயன் அடைந்தன .

பேச்சிப்பாறை அணையை உருவாக்கிய பொறியாளர் அலெக்சாண்டர் மின்சின், மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 1913-ம் ஆண்டு  செப்டம்பர் 25-ம் தேதி இறந்தார். அவர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த திருவிதாங்கூர்  மன்னர், பொறியாளர் அலெக்சாண்டர் மின்சின் உடலைப் பேச்சிப்பாறை அணைப் பகுதியிலேயே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்து அந்தப் பகுதியில் கல்லறை கட்டவும் உத்தரவிட்டார். அதன் பேரில் அங்கு கல்லறை கட்டப்பட்டு இன்று நினைவுச் சின்னமாக காட்சியளிக்கிறது .கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை கட்டி விவசாயத்தை செழிக்கச் செய்த இங்கிலாந்து பொறியாளர் அலெக்சாண்டர் மின்சினின் நினைவு தினத்தை முன்னிட்டு ’நாம் தமிழர் கட்சி’ சார்பில் குமரி வடக்கு மண்டலச் செயலாளர் ஜாண்சிலின் சேவியர் ராஜ் தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement