கிராமப்புற சேவையில் ஒரு கல்லூரி மாணவிகள் குழு!

சென்னை அடுத்த பெரிய அளவில் மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களுக்குத் தேடிச்சென்று, இலவச மருத்துவ முகாம் நடத்துதல், தெருக்கூத்து, வீதி நாடகம் போன்றவற்றின்மூலம்  பெண் கல்வி, குழந்தைகள் உரிமை போன்றவை குறித்து கிராம மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துதல் போன்ற சமூகப்பணிகளை எஸ்.டி.என்.பி.வைணவ மகளிர் கல்லூரி மாணவிகள் தொடங்கியுள்ளனர்.

மருத்துவ முகாம்

குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி.வைணவ மகளிர் கல்லூரியின் முதுகலை சமுகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் உயிர் பவுண்டேஷன் இணைந்து 'புதிய பாதையை நோக்கி' என்ற தலைப்பில் ஒருவார கால கிராமப்புற விழிப்புஉணர்வு முகாமை நடத்துகின்றனர். 22-ம் தேதி உத்திரமேரூர் அருகே உள்ள  மருத்துவான்பாடியில் தொடங்கிய இந்த முகாமின் ஒரு பகுதியாக இன்று காலை (25-ம் தேதி) இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதயம், கண், தோல், சர்க்கரை நோய், குழந்தைகள் நலம்  உள்ளிட்ட 19 துறை மருத்துவர்கள் பங்கேற்று நோயாளிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினர். இந்த முகாமில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர்.

கிராமபுற சேவையில் ஒரு மருத்துவ முகாம் 


ஏற்கெனவே, 23-ம் தேதி ஒழுகரையில் பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புஉணர்வு கருத்தரங்கும், 24-ம் தேதி சுற்றுப்புறச்சூழல் மற்றும் விவசாயிகளின் உரிமை குறித்து விழிப்புஉணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றது. அதேபோல, நாளை  (26-ம் தேதி) கருவேப்பம்பூண்டி கிராமத்தில் மனநலம் சம்பந்தமான ஆலோசனை முகாம் நடைபெற இருக்கிறது. நாளை மறுநாள் (27-ம் தேதி) அதே கிராமத்தில் குழந்தைகள் நலம் மற்றும் அவர்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புஉணர்வு நிகழ்ச்சியுடன், ஒருவார கால கிராமப்புற விழிப்பு உணர்வு முகாம் நிறைவு பெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!