Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை எச்சரிக்கை.!

தேனி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவடங்களின் ஒன்று. குறிப்பாக கம்பம், போடி ஆகிய பகுதிகள் வருடம் முழுவதும் அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும் பகுதிகள். ஆனால், இந்த வருடம் நினைத்தது போல தென்மேற்குபருவமழை இல்லாத நிலையிலும், முல்லைப் பெரியார் அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை தேனி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை அதிகளவில் பெய்ய வாய்ப்பிருக்கிறது.

புயல் மற்றும் கனமழையால் ஏற்படும் வெள்ளச்சேதங்களைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர அவசரகால கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. பொதுமக்கள், பேரிடர் தொடர்பான நிவாரணம் மற்றும் உதவிகளுக்கு 1077 என்ற எண்ணிலோ, 04546-261093 என்ற எண்ணிலோ அல்லது 9159737331 என்ற கைப்பேசி எண்ணிலோ அல்லது வாட்ஸப் மூலமாகவோ தகவல்கள் தெரிவிக்கலாம்” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement