வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (26/09/2017)

கடைசி தொடர்பு:10:58 (26/09/2017)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு விருது

உள்நாட்டு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியதற்காக தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சிறந்த துறைமுக விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

thoothukudi port

ராஜ்யசபா துணைத்தலைவர் பி.ஜே.சூரியன் இவ்விருதை வழங்கினார். இந்தியாவிலுள்ள பெருந்துறைமுகங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்நாட்டு சரக்குகள் கையாளுவதில் முன்னோடி துறைமுகமாகத் திகழ்கிறது. கடந்த நிதியாண்டில் 74.91 லட்சம் டன்கள் உள்நாட்டு சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் உள்நாட்டு சரக்குகள் கையாளுவதில் இத்துறைமுகத்தின் ஆண்டு கூட்டுவளர்ச்சி விகிதம் 4.14% ஆகும். கடந்த நிதியாண்டில் கையாண்ட மொத்த சரக்கு 386.40 லட்சம் டன்களில் 19.38% உள்நாட்டு சரக்குகளாகும். கடந்த 2015-16ம்  ஆண்டு உள்நாட்டு சரக்குக் கப்பலின் எண்ணிக்கை 335 ஆக இருந்தது. 2016-17ம் ஆண்டில் 376 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் சரக்குப் பெட்டகங்களைப் பொறுத்தவரையில் 1,09,606 டி.இ.யூ.,  உள்நாட்டு  சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன.

award for thoothukudi port

இத்துறைமுகத்தின் மூலமாக 25 உள்நாட்டு சரக்குகளின் சேவைப் பரிமாற்றங்களில் முக்கியமாக அனல்மின் நிலைய நிலக்கரி விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்தும், பாரதீப் துறைமுகத்திலிருந்தும், மூந்திரா துறைமுகத்திலிருந்து சரக்குப் பெட்டகம் மூலமாகப் பருத்தியும், கொச்சின் துறைமுகத்திலிருந்து முந்திரிப்பருப்பும், ஹால்டியா, காக்கினாடா மற்றும் போர்பந்தர் ஆகிய துறைமுகத்திலிருந்து கரி ஓடுகளும், கான்ட்லா துறைமுகத்திலிருந்து உப்பும் உள்நாட்டு சரக்கு சேவையில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

உள்நாட்டு சரக்கு கையாளுவதில் 7 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக 2019-20-ம் ஆண்டில் உயர்த்துவதற்காக மத்தியக் கப்பல்துறை அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டும், தென்னிந்தியாவின் கடல்வாணிபத்தை மேம்படுத்தும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டும் 168 மீட்டர் நீளமும் 9.3 மீட்டர் அகலமும் கொண்ட இத்துறைமுகத் தளம் -1 மற்றும் 100 மீட்டர் நீளமும் மற்றும் 7.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட அலைத்தடுப்பணையும் உள்நாட்டுச் சரக்கை கையாளுவதற்கு நியமனம் செய்துள்ளது. இத்துறைமுகத்தில் உள்நாட்டு சரக்குக் கப்பல்களுக்குக் கப்பல்தளம் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ரூ.38.91 கோடி முதலீட்டில் வருடத்திற்கு 3 மில்லியன் டன் கையாளக்கூடிய உள்நாட்டு சரக்கு கையாளும் தளம் கட்டுமானப்பணி முடியும் நிலையில் உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க