Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தண்ணீர் வழங்காததைக் கண்டித்து ரேஷன் கார்டுகளை வீசி எறிந்த பொதுமக்கள்!

 

குடிநீர் வழங்காததைக் கண்டித்து தங்களின் குடும்ப அட்டைகளை வீசி எறிந்த பெண்களால் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பட்டாளம்மன் நகர் பகுதி மக்கள், தங்கள் பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடனும் வந்து தங்களின் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீசி எறிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்கள் ஊரில் கடந்த இரண்டு வருடங்களாகக் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது 6 மாதங்களாக சுத்தமாக தண்ணீர் கிடைக்கவில்லை எனவும் பக்கத்தில் உள்ள கண்மாய்களில் சென்று குடிக்க தண்ணீர் எடுத்து வருவதாகத் தெரிவித்தனர். அதனால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. அதனால் தங்களுக்குப் புதிய குடிநீர்க் குழாய் அமைத்துத் தர வேண்டும் எனப் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் தங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை எனத் தெரிவித்தனர்.அதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தங்களின் குடும்ப அட்டைகளை வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement