Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடைபாதையை மீட்டுத்தரக் கேட்டு தாலியைக் கழட்டிய பெண்..!

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த படப்படி தெருவைச் சார்ந்த சரஸ்வதி என்ற பெண் தனது வீட்டிக்குச் செல்லும் நடைபாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக, அதை மீட்கக்கோரி தன் தாலியைக் கழட்டிக்கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று திங்கள் கிழமை வழக்கம் போல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது சரஸ்வதி என்ற பெண் தாங்கள் 40 ஆண்டுகளாக சென்றுவந்த நடைபாதையை திடீர் என்று சிலர் அடைத்துவிட்டதாகவும் என்ன ஏது என்று கேட்டதற்கு கோர்ட்டில் ஆர்டர் வாங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தனது தாலியை அடகுவைத்து அந்தப் பணத்தில் பாதையை மீட்டுத்தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு மாவட்ட ஆட்சியர், 'இவ்வாறெல்லாம் செய்யவேண்டாம். ஆலோசனை செய்துவிட்டு ஆக்கிரமிப்பை அகற்றித்தர பரிசீலிப்பதாக' தெரிவித்தார். பின் மனுவைப் பெற்றுக்கொண்டு அதிகாரிகளை விசாரிக்க உத்தரவிட்டார். இந்தச் சம்பவத்தால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement