Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'போட்டுக் கொடுத்துருவாங்கனு பொய் சொன்னோம்' - அப்போலோ ரகசியம் சொன்ன மற்றொரு அமைச்சர்!

போட்டுக் கொடுத்துருவாங்கனு பொய் சொன்னோம் என்று அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.

இதே நாள்களில் கடந்த ஆண்டு, அப்போலோ மருத்துவமனை சட்டசபையாக மாறியிருந்தது. ஒரு மாநிலத்தின் முதல்வர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் அங்கு குவிந்திருந்தனர். அந்த மாநிலத்தின் ஆளுநர் கூட அவரைப் பார்க்கவில்லை என்று தகவல்கள் வெளியாயின. ஆனால், அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், "ஜெயலலிதா நலமாக இருக்கிறார். இட்லி சாப்பிட்டார். உப்புமா சாப்பிட்டார். விரைவில் பூரண குணமாகி வீடு திரும்புவார்" என்றனர். அந்தக் கருத்துகளை பலப்படுத்துவது போலவே, ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அப்போலோவும் அறிக்கைகளை விட்டது.

அமைச்சர் வீரமணி

ஆனால், அவர்கள் சொன்னது போல ஜெயலலிதா பூரண குணமடையவில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவருக்கு, அந்த மருத்துவமனைக்குள் 75 நாள்கள் என்ன நடந்தது என்பதே இன்னும் மர்மமாக இருக்கிறது. தற்போது, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி மற்றும் ஆட்சியைக் கைப்பற்றுவதில் போட்டா போட்டி நடைபெற்று வருகிறது. இதனால், சில உண்மைகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இதனிடையே, "ஜெயலலிதாவைப் பார்த்ததாக நாங்கள் அனைவரும் பொய் சொன்னோம். அவர் இட்லி சாப்பிட்டதாக, சசிகலாவுக்கு பயந்து பொய் சொன்னோம்" என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவான் சர்ச்சையைக் கிளப்பினார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது மற்றொரு அமைச்சரும் இதே கருத்தைக் கூறியுள்ளார். 

வேலூர் மாவட்டம், சோளிங்கரில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி பேசுகையில், "ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பா இருப்போம்னு சொன்ன சசிகலா, அவர வெளிநாட்டுக்கு அழைச்சுட்டு போய் ஏன் சிகிச்சை அளிக்கல. அப்போலோல நாங்க யாரும் ஜெயலலிதாவ பார்க்கல. ஜெயலலிதா உடம்பு சரியாகி வந்தோன, சசிகலா எங்களப்பத்தி அவங்கக் கிட்ட போட்டுக் கொடுத்துருவாங்கனுதான், அவங்க (சசிகலா) சொன்னத அப்டியே வெளிய வந்து சொன்னோம். 2 இட்லி சாப்பிட்டாங்கனு சொன்னதெல்லாம் பொய்தான்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement