Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`கடலூர் to கலெக்டர் ஆபிஸ் 50 கி.மீ' - அதிரவைத்த நெடுஞ்சாலைத்துறை!

கடலூர் நகர பிரதான சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் போர்டு ஒன்று பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்ததோடு மட்டுமல்லாமல், கேலிக்கூத்தாகவும் உள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினரின் போர்டு
  

கடலூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செம்மண்டலத்திலிருந்து பாண்டி செல்லும் பிரதான சாலையில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதற்கு, நெடுஞ்சாலைத்துறை 'செம்மண்டலத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 50 கிலோ மீட்டர்' தூரம் என்று வழிகாட்டி போர்டு வைத்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறையின் இந்த சின்சியாரிட்டி வேலையைப் பார்த்து, அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எல்லோரும் அதிர்ச்சியடைவது மட்டுமல்லாமல் கேலிக்கூத்தாகவே நினைக்கின்றனர்.

 நெடுஞ்சாலைத்துறையினரின் போர்டு

‘வழிகாட்டுதல் போர்டு என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கியமான ஒன்று. அதிகாரிகளின் இந்தச் சிறு தவறு பொதுமக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குத் தெரியாதா? இப்பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எவ்வளவு தூரம் என்று நகரவாசிகளுக்குத் தெரியும். ஆனால், வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு எப்படித் தெரியும். கடலூரிலிருந்து பாண்டிக்கே 22 கிலோ மீட்டர் தூரம்தான். ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 50 கிலோ மீட்டர் என்று போர்டு வைத்திருக்கும் நெடுஞ்சாலைத்துறையை நினைத்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

படிப்பறிவு இல்லாதவர்கள்தான் அதன் மேல் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்றால், படித்த அதிகாரிகள் இப்படிச் செய்கிறார்கள். பொறுப்பற்ற ஒரு சில அதிகாரிகளால் ஒட்டுமொத்த துறைக்கே அவப்பெயர். இதைப் பார்த்து பொதுமக்கள் கேள்வி கேட்பார்களே கைதட்டி சிரிப்பார்களே என்ற பயம் இல்லை அவர்களுக்கு. ஆட்சியாளர்கள் ஒழுங்கா இருந்தால்தானே அதிகாரிகள் ஒழுங்காக இருப்பார்கள். ரேஷன் கார்டில் காஜல் அகர்வால், விநாயகர் படத்தை போட்ட அரசு அதிகாரிகள்தானே இவர்கள்’ என்று சிரிக்கின்றனர் நகரவாசிகள்.
                              

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement