Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்டியல் இன மக்களுக்காக பூசாரியாக மாறிய பெண் எஸ்.ஐ

விஜயதசமி பண்டிகையை  முன்னிட்டு வட மாநிலங்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் துர்கா சிலை நிறுவி சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதற்காக, லட்சக்கணக்கில் மக்கள் பணம் செலவிடுவார்கள். கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ள துர்கா சிலைக்கு ரூ 6.5 கோடி செலவில் 22 கிலோ தங்கத்தினாலான வைர பார்டர் கொண்ட சேலை நெய்யப்பட்டு அணிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 கலைஞர்கள் இரண்டரை மாதங்களில் இந்தத் தங்கச் சேலையை உருவாக்கியுள்ளனர். வட மாநிலங்களில் துர்கா பூஜை அவ்வளவு பிரசித்தம். 

துர்கா சிலைக்குத் தங்க சேலை

மத்தியப் பிரதேசத்தில் தாமோ மாவட்டத்தில் கோத்ரா என்ற கிராமத்தில் வசித்து வந்த பட்டியலின மக்களுக்கும் துர்கா சிலை நிறுவி வழிபாடு நடத்த ஆசை. ஆனால் பிற சமூகத்து மக்கள் இதற்குத் தடையாக இருந்தனர். எனினும், பூசாரியிடம் சென்று, 'தாங்கள் சிலை வைத்தால் வந்து வழிபாடு நடத்தித் தருவீர்களா? 'எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, தங்கள் பகுதியில் துர்கா சிலையை நிறுவினர். ஆனால் பூஜை செய்வதற்கு பூசாரி மறுத்துவிட்டார். 

பூஜையில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர்

இதனைத்தொடர்ந்து, கிராம மக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அஞ்சலி உதேநியா,  பூசாரியிடமும் பிற சமூகத்து மக்களிடமும் சமாதானப் பேச்சில் ஈடுபட்டார். முடிவு கிடைக்காத நிலையில், ' எனக்கு பூஜை செய்யத் தெரியும். துர்கா சிலைக்கு நானே வழிபாடு செய்கிறேன்' என கூறி நேர்த்தியாக பூஜையிலும் ஈடுபட்டார்.  அவர் பூஜை செய்வதைப் பார்த்த பூசாரியும் வந்து பூஜையில் கலந்து கொண்டார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement