‘நமது எம்.ஜி.ஆரும்’ இல்லை... ‘ஜெயா டி.வி.யும்’ இல்லை... ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸின் அடுத்த கட்டம்!

ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்

ட்சியை கைப்பற்ற தெரிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்ச ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அதிமுக-வின் பிராதான ஊடகங்களை கைபற்ற முடியவில்லை. அதனால் அ.தி.மு.க செய்திகளை உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிப்பதற்காக பத்திரிகையும், டி.வி சேனலையும் தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'டாக்டர் நமது எம்.ஜி.ஆரும்', அ.தி.மு.க-வின் அங்கீகரிக்கப்பட்ட தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகும் ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றின் நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் சசிகலா குடும்பத்திடம் இருந்து வருகிறது. தற்போது இந்த இரண்டு ஊடகங்களின் தலைமை செயல் அதிகாரியாக சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்-இளவரசி தம்பதியின் மகனான விவேக் இருந்து வருகிறார். தற்போது இந்த இரண்டு ஊடகங்களுக்கும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வுக்கும் எந்த வித தொடர்பும் இல்லாமல் போனது.

ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இருவரையும் கண்டனம் செய்துதான் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. தவிரவும், ஜெயா டி.வி-யில் இப்போது ஆட்சிக்கு எதிரான செய்திகள்தான் ஒளிபரப்ப ப்படுகின்றன. இதனால் ஆட்சி பற்றி எந்த ஒரு செய்தியையும் முழுமையாகத் தரமுடியாமல் இருக்கிறது என்று எடப்பாடி தரப்பினர் கருதுகின்றனர்.  கடந்த ஆகஸ்ட் மாதம் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஜெயா டி.வி-யையும், நமது ஏம்.ஜி.ஆர் நாளேடையும் சட்டப்படி மீட்ப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதற்கு ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்.ஜி.ஆரின் தலைமை செயல் அதிகாரியான விவேக், எடப்பாடி பழனிசாமியின் தீர்மானத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். அதாவது "ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையும் தனியார் சொத்து. அந்தச் சொத்துக்களை மீட்ப்போம் என்று பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இது சட்டப்படி தவறு" என்று அறிவித்தார்.

நமது எம்.ஜி.ஆர்

இந்தநிலையில், அ.தி.மு.க-வின் பேச்சாளரான திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயகோவிந்தன் சமீபத்தில் 'நமது அம்மா' என்ற நாளேடை தொடங்கினார். அதில் அ.தி.மு.க பற்றிய தகவல்களை உடனுக்குடன் செய்தியாக தந்துவந்தார். இந்த நிலையில் பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ் மீண்டும் இணைந்தபோது 'நமது அம்மா' பத்திரிகையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையை மீட்கும் வரை 'நமது அம்மா' பத்திரிகையை அ.தி.மு.க-வின் அதிகாப்பூர்வ நாளேடாக மாற்ற வேண்டும் என அதற்கான முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதற்கான பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான வேலுமணியும், தங்கமணியும் ஈடுப்பட்டுனர். கடந்த 20- ம் தேதி பழனிசாமி காவிரி புஷ்கரத்தில் நீராடிய நாளன்றுதான் 'நமது அம்மா' பத்திரிகையை அ.தி.மு.க-வின் பத்திரிகையாக மாற்றி பூஜை போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த பூஜை தள்ளிப்போக. பத்திரிகை தொடங்கும் ஏற்பாடும் தள்ளிப்போனது.

எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக 'நமது அம்மா' பத்திரிகையை அ.தி.மு.க-வின் பத்திரிகையாக மாற்றவேண்டும் என பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது அந்தப் பத்திரிகையை வாங்க வேண்டாம், நாமே சொந்தமாகப் பத்திரிகையை தொடங்கிவிடலாம் என உயர்மட்ட நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொண்டு உடனடியாகக் கட்சிக்கென்று புது பத்திரிகையையும், 'அம்மா டி.வி' என்ற தொலைக்காட்சியையும் ஆரம்பிக்கவேண்டும் சொல்லியுள்ளார். அதற்கான வேலைகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறன.

விரைவில் அ.தி.மு.க-வுக்கென்று தனிப் பத்திரிகையையும், அம்மா டி.வி-யையும் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!