Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேருந்து வசதி இல்லாமல் பல கி.மீட்டர் தூரம் நடந்து செல்லும் மக்கள்!

பிரதமர் நரேந்திர மோடி புல்லட் ரயில் விட இருக்கும் நிலையில் இன்னும் பல கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாமல் இருப்பது ஆட்சியாளர்களுக்கு அசிங்கத்தை ஏற்படுத்துகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த மாரியப்பன்புதூர், ரெக்கனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து வசதி இல்லாமல் பள்ளிக் குழந்தைகளும் பொதுமக்களும் தவித்து வருகிறார்கள்.

இதுபற்றி பிச்சாம்பாளையம் முன்னாள் கவுன்சிலர் முருகன், ''சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து துச்சியாம்பாளையம், மேலூர், பரவக்குட்டை, மாரியம்மன்புதூர், மேலக்காடு, சமத்துவபுரம், அரசன்குட்டை, பள்ளத்தாதனூர் வரை 12 கிலோ மீட்டருக்குப் பேருந்து வசதியே இல்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போட்டும் இன்று வரை பஸ் விடவில்லை. இந்தப் பகுதிகளில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நான் மாரியம்மன்புதூர் பகுதியில் குடியிருக்கிறேன். நான் பஸ் ஏறப் போக வேண்டும் வடக்கே வாழப்பாடிக்கோ வடமேற்கே உள்ள பள்ளத்தாதனூருக்குத்தான் போக வேண்டும் வாழப்பாடிக்கு பஸ் ஏறப் போனால் 6 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். பள்ளத்தாதனூருக்கு பஸ் ஏறப் போனால் பல கி.மீட்டர் நடந்து செல்ல வேண்டும்.

இந்த ரூட்டில் ஒரு அரசு பஸ்ஸாவது விட வேண்டும் என பல போராட்டங்கள் செய்தும் அரசு பஸ் ஒன்றுகூட விடவில்லை. மினி பஸ் அறிமுகம் ஆனபோது இந்த வழியாக 6-க்கும் மேற்பட்ட தனியார் மினி பஸ்ஸூகள் சென்றன. நாளடைவில் ஒவ்வொரு மினி பஸ்ஸாக நின்றுவிட்டது. கடைசியாகக் கடந்த 4 மாதத்துக்கு முன்பு 2 மினி பஸ் ஓடிக்கொண்டிருந்தன. அவையும் தற்போது நின்றுவிட்டன.

இதனால் இக்கிராமத்தில் உள்ள மக்கள் பஸ் வசதி இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறோம்.  பள்ளி குழந்தைகளும் கல்லூரி மாணவ மாணவிகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்கும்கல்லூரிகளுக்கும் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை மார்க்கெட் கொண்டு செல்ல முடியவில்லை. அரசு மனம் இறங்கி இந்த ரூட்டில் அரசுப் பேருந்து ஒன்றாவது விட வேண்டும். இல்லையென்றால், இந்த வழியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுகூடி பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்'' என்றார்.

மாணவன் ஹரிகிருஷ்ணன், ''என்னோட ஊரு மாரியம்மன்புதூர். நான் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். எங்க ஊரில் இருந்து பஸ் வசதி இல்லாததால்6 கி.மீட்டர், மாலையில் 6 கி.மீட்டர் சைக்கிளில்தான் பள்ளிக்குச் செல்கிறேன். 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் நடந்து பள்ளிக்க்ச் செல்கிறார்கள். இதனால் கால தாமதம் ஏற்படுவதோடு குறித்த நேரத்தில் பள்ளிக்குப் போக முடியவில்லை. அதனால் எங்க கிராமத்தின் வழியாக அரசுப் பேருந்து வர வேண்டும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement