Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் முதல் சமத்துவம்: மாணவர்கள் 50% மாணவிகள் 48%

மத்துவம் வேண்டும் என்பது பெண்களின் ஆண்டாண்டு கால கோரிக்கை. விளையாட்டுத்துறையில்கூட ஆடவர் போட்டிகளைவிட மகளிர் போட்டிகளுக்குப் பரிசுத்தொகை குறைவாகவே இருக்கும். இந்திய நாடாளுமன்றத்தில் 11 சதவிகிதமும் இந்திய நிறுவனங்களில் 3.4 சதவிகித பெண் நிர்வாகிகளும் (500 முன்னணி நிறுவனங்களில் 17 பேர்தான் உள்ளனர்) பணித்துறையில் 27 சதவிகிதமும் சட்டமன்றங்களில் 8.8 சதவிகித பெண்களும் உள்ளார்கள். 

மாணவர்களை எட்டியது மாணவிகள் எண்ணிக்கை

இந்தியாவில் பள்ளிக்குச் செல்வதில் முதன்முறையாக மாணவர்களை மாணவிகள் எட்டிப்பிடித்துள்ளனர். தற்போதுள்ள 3 கோடி இந்திய மாணாக்கர்களில் 2016-ம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி, 48 சதவிகிதம் பேர் மாணவிகள். விரைவில் மாணவர்களை மாணவிகள் முந்தியும் விடுவார்கள். 

கடந்த 1951-ம் ஆண்டு மாணவிகளின் எண்ணிக்கை 25 சதவிகிதமாக இருந்தது. 40 ஆண்டுகள் கழித்து 1991-ம் ஆண்டு 39 சதவிகிதமாக உயர்ந்தது. 2001-ம் ஆண்டு 42 சதவிகிதமாக அதிகரித்து 2016-ம் ஆண்டு 48 சதவிகிதத்தை எட்டியிருக்கிறது. பட்டப்படிப்பில் இளம் கலை, அறிவியல் பிரிவுகளில் மாணவர்கள் அதிக பேர் படித்தாலும் முதுகலைப் படிப்பில் மாணவிகளே அதிகம் பேர் சேர்கின்றனர்.

 இன்ஜினீயரிங்கில் 3:1 என்ற விகிதத்தில் மாணவர்களை மாணவிகள் முந்தியுள்ளனர். மருத்துவப் படிப்பில் மட்டுமே மாணவர்களைவிட மாணவிகள் பின்தங்கியுள்ளனர். மாணவிகளின் எண்ணிக்கை ஐரோப்பிய நாடுகளில் 54 சதவிகிதம். அமெரிக்காவில் 55 சதவிகிதம் சீனாவில் 54 சதவிகிதமாக இருக்கிறது.

1990-ம் ஆண்டு முதல் பெண் குழந்தைகள் அதிகளவில் பள்ளிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அனைவருக்கும் கல்வி மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் இதற்கு முக்கியக் காரணம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement