Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

19 மாவட்ட எஸ்.பி-க்களுக்கு டி.ஜி.பி திடீர் உத்தரவு!

அசாதாரண சூழ்நிலையால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் 19 மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் திடீரென உத்தரவுப் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசியல் பரபரப்பு அடங்குவதற்குள் 19 மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று முக்கிய உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறப்பு காவல்படையினரை இன்றும் நாளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அசாதாரண சூழ்நிலையால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் டி.ஜி.பி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த உத்தரவு குறித்து செய்தியாளரிடம் விளக்கிய  டி.ஜி.பி ‘சிறப்பு காவல்படையினர் சிறப்புப் பணிகள் முடித்து முகாம்களுக்கு திரும்புவது வழக்கமான நடவடிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement