வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (26/09/2017)

கடைசி தொடர்பு:18:32 (26/09/2017)

விரைவில் வெளியாகிறது ரெட்மி நோட் 5

 

Redmi note 5

இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியடைந்த ரெட்மி நோட் 4-க்கு அடுத்ததாக விரைவில் வெளியாக இருக்கிறது ரெட்மி நோட் 5. குறைந்த விலை அதிக வசதிகள் என ஜியோமி நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனின் இடத்தை ரெட்மி நோட் 4 பிடித்திருக்கிறது. அதுவும் தற்போது அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் என இரண்டு நிறுவனங்களும் கடந்த வாரம் நடத்திய சேல்ஸில் இரண்டே நாள்களில் 10 லட்சம் மொபைல்கள் விற்று சாதனை படைத்திருக்கிறது. 

இதனிடையே, ரெட்மி நோட் 4-க்கு அடுத்ததாக ரெட்மி நோட் 5-ஐ விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஜியோமி. ரெட்மி நோட் 5 அட்டைப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. பிற தகவல்கள் முழுமையாக வெளி வராவிட்டாலும் 5.5 இன்ச் திரை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் இதில் இருக்கலாம், மேலும் ரெட்மி நோட் 5 டூயல் கேமரா வசதியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.