Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கணவர் நடராஜனைப் பார்க்க சசிகலா பரோல் மனு..!

நடராஜன்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று பரோல் கேட்டு சசிகலா மனு போட்டுள்ளார். 

சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைபெற்றுவந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல், சிறுநீரக நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, அவரது உறவினர்கள் அருகிலிருந்து கவனித்துவருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு, தினமும் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. 

சசிகலா

இந்நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் அவருக்கு இப்போது தேவைப்படுகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. உடல்நலம் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சைபெற்றுவரும் தனது கணவர் நடராஜனை, மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று பெங்களூரு சிறைத்துறைக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார் சசிகலா. இந்த பரோல் மனுவை சிறைத்துறை தீவிரமாகப் பரிசீலித்துவருகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement