Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசு சார்பாக மதுரையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் !

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், கல்லூரியில் வேலை வாய்ப்பு முக்கியத்துவம் மற்றும் தொழில்முனைவு முக்கியத்துவம் பற்றி மாணவர்களிடையே தொடர்ச்சியாக விழிப்புஉணர்வு செய்துவந்தார். மேலும், கிராமங்களுக்குத் திட்டங்கள் தொடங்கச் செல்லும்போது, இளையஞர்களிடம் இதுதொடர்பாக விழிப்புஉணர்வு செய்துவந்தார். இந்நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது .

70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான பணியாட்களைத் தேர்வுசெய்தனர். இதில் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள், ஐ.டி.ஐ. டிப்ளோமா, பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் 6,500 நபர்களுக்கு மேல் கலந்துகொண்டனர். முகாமில் பங்கேற்ற 1,200 பேருக்கு மேல் பணியாணை வழங்கப்பட்டது. சில பெரிய நிறுவனங்கள், முதல்கட்ட நிலையில் தேர்வுசெய்யப்பட்ட சிலர், இரண்டாம்கட்ட கலந்தாய்வுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தலைமை வகித்தார். பல்கலைக்கழகப் பதிவாளர் வி.சின்னையா வரவேற்றார். இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் பல இளைஞர்கள் பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement