Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லை அ.தி.மு.க-வை கூண்டோடு மாற்றிய டி.டி.வி.தினகரன்... தொண்டர்கள் அதிர்ச்சி!

நெல்லை மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளைக் கூண்டோடு மாற்றி, அதிர்ச்சிவைத்தியம் கொடுத்திருக்கிறார், துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன்.

டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க-வில் எதிரும் புதிருமாகச் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள், கடந்த மாதம் 21-ம் தேதி இணைந்த பின்னர், டி.டி.வி.தினகரன் அணியினர் தனித்து விடப்பட்டனர். கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டிருந்த  தினகரனையும் எதிர்த் தரப்பினர் அங்கீகரிக்க மறுத்ததுடன், பொதுச்செயலாளரான சசிகலாவையும் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்குவதாக அறிவித்து, அதிர்ச்சிவைத்தியம் கொடுத்தனர். அத்துடன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக  விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. 

நெல்லை மாவட்டத்தில், டி.டி.வி.தினகரன் ஆதரவு நிர்வாகிகள் அதிகமாக இருக்கும்நிலையில், சமீபத்தில் அனைவரும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவிவிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், தென்காசி தொகுதியின் எம்.பி-யான வசந்தி முருகேசன், எடப்பாடி அணிக்குச் சென்றுவிட்டார். மாநகர மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா, மாநில மகளிரணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான விஜிலா சத்யானந்த் ஆகியோர், டி.டி.வி.தினகரன் அணியில் உறுதியாக உள்ளனர். 

மாற்று முகாமுக்குச் சென்றவர்களை கட்சியின் பொறுப்புகளிலிருந்து விலக்குவதாக டி.டி.வி.தினகரன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, மாநகர மாவட்டப் பொருளாளராக இருந்த தச்சை கணேசராஜா விடுவிக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு ஏ.பி.பால்கண்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார். மாநகர மாவட்ட இணைச்செயலாளராக இருந்த வசந்தி முருகேசன் எம்.பி-க்குப் பதிலாக, முன்னாள் கவுன்சிலரான தெளலத் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

நெல்லை மாநகர மாவட்டத் துணைப் பொதுச்செயலாளரான தேவகி குழந்தைவேலுக்குப் பதிலாக, சுமதி நியமனம்செய்யப்பட்டுள்ளார். மேலப்பாளையம் பகுதிச் செயலாளர் ஹயாத்துக்குப் பதிலாக ஹைதர் அலியும், நெல்லை பகுதிச் செயலாளரான மோகனுக்குப் பதிலாக சுப்பையாவும் நியமிக்கப்படுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். பாளையங்கோட்டை பகுதிச் செயலாளராக அசன் ஜாஃபர் அலி சில வாரங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.

புறநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளராக திருமலாபுரம் துரைப்பாண்டியன், குருவிகுளம் ஒன்றியச் செயலாளராக பாண்டியராஜன், மானூர் வடக்கு ஒன்றியச் செயலாளராக சேகர் மேலநீலிதநல்லூர் ஒன்றியச் செயலாளராக முருகையா, சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியச் செயலாளராக மகாராஜன், தெற்கு ஒன்றியச் செயலாளராக நயினார், கடையநல்லூர் ஒன்றியச் செயலாளராக  பெரியதுரை, செங்கோட்டை ஒன்றியச் செயலாளராக பெரியதுரை, நகரச் செயலாளர்களாக செங்கோட்டை பகுதிக்கு முத்தையா, கடையநல்லூருக்கு கமாலுதீன், சங்கரன்கோவிலுக்கு சங்கரநாராயணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். 

இது தவிர, பேரூராட்சிகளான ஆய்குடி, வடகரை கீழ்பிடாகை, புதூர், அச்சன்புதூர், வாசுதேவநல்லூர், ராயகிரி, சாம்பவர் வடகரை ஆகியவற்றின் நிர்வாகிகளாக மாரியப்பன், காஜாசெய்யது ஒலி, துரைப்பாண்டியன், லியாகத் அலி, நாகராஜ், அணைத்தலை, இசக்கி ஆகியோரை டி.டி.வி.தினகரன் நியமித்துள்ளார். இந்த நியமனம் அனைத்தும் கழகத்தின் பொதுச்செயலாளரான சசிகலா ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த அதிரடி மாற்றத்தால், கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement