டீஜேவுக்கு வாய்ப்பு கொடுத்த ஹிப்ஹாப் தமிழா

திரை உலகிற்கு வந்தால்தான் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்க முடியும் என்ற காலம் போய்விட்டது. இண்டிபென்டென்ட் சிங்கர்ஸ் எனத் தாமே பாடல் எழுதி, இசையமைத்து, பாடி இணையதளங்களில்வெளியிட்டு, அதை ஹிட் ஆக்குவதுதான் இப்போதைய ட்ரெண்ட். இதற்கான வரவேற்பு உண்மையில் சினிமாவுக்கு நிகரான ஓர் அடையாளத்தைக் கொடுக்கிறது, அதிக ரசிகர்களையும் கொடுக்கிறது என்றே சொல்லலாம்.  இப்படி 'முட்டு முட்டு', 'ஆசை', 'தேன் குடிக்க' போன்ற பாடல்கள் மூலம் இணையத்தில் வைரலானவர் டீஜே. 
  

ஹிப்ஹாப் தமிழா

இவரின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, இவருக்கு அதர்வா, நயன்தாரா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் பாட்டுப் பாட வாய்ப்பு தந்திருக்கிறார். அதனால், மிகுந்த மகிழ்ச்சியடைந்த டீஜே, தன் ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். ஆக, இவரது இணையதள ரசிகர்கள், ஆதியின் இசையில் இவரது பாடலைக் கேட்க மிகுந்த எதிர்ப்பார்ப்போடு உள்ளனர். ஹிப்ஹாப் ஆதியும் இண்டிபென்டென்ட் சிங்கராக இருந்துதான் சினிமாவில் கால் பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!