வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (27/09/2017)

கடைசி தொடர்பு:11:16 (27/09/2017)

15 வருடங்களில் 38,363 பேர்.. பலிவாங்கிய தமிழகக் கட்டடங்கள்... #VikatanInfographics

முகலிவாக்கம் கட்டடம் இடிந்து விழுந்ததுதான் தமிழகத்தில் பலரது பார்வையைக் கட்டட விபத்துகள்மீது திருப்பியது. இன்று சென்னை சாலைகளில் நாம் காணும் வேற்று மாநிலக் கட்டடத்தொழிலாளர்கள் தொடங்கி ஊருக்குள் பாலங்கள் கட்டிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் வரை அனைவரும் தினசரி உயிர் பயத்தோடுதான் வேலைக்குச் செல்கிறார்கள். கடந்த 15 வருடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் கிடைக்கும் தகவல்கள் பதபதைக்க வைக்கின்றன.

2011 ஆய்வின் படி சென்னையில் பல கட்டடங்கள் பொறியாளர்கள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இது சாதாரண நில அதிர்வுகளுக்கே சரிந்து விழ வாய்ப்புள்ளதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது. 22,758 அடுக்கு  கட்டடங்களில் ( குறைந்தது மூன்று மாடிகளை கொண்டது)  29% கட்டடங்கள் நில அதிர்வை தாங்க தகுதியற்றதாக கட்டப்பட்டுள்ளது.

முறையான தர சான்றிதழ் இல்லாமல் , தரமில்லாத கட்டுமான பொருட்களினாலும் கட்டப்படும் கட்டடங்களினால் இழப்பது மனித உயிர்களைத்தான். 2016ல் 46 கட்டட தொழிலாளர்களும், 2017ல் ஜூலை வரை 42 கட்டட தொழிலாளர்களும் இறந்துள்ளனர். கடந்த 15 வருடங்களில் மட்டும் 38363 பேர் இறந்துள்ளனர். கட்டடம் கட்டும் செலவில் 1 சதவிகிதம் தொழிலாளர் நல நிதியாக செலுத்த வேண்டும் என்பது அரசின் சட்டம். இது சில இடங்களில் சரியாக பின்பற்றப்படவிலை என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.

கட்டட வேலைகளால் இறந்தவர்களில் 45 சதவிகிதம் பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள். தமிழ்நாட்டில் பணிபுரியும் வேறு மாநிலத்தவர்களில் 15000 பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் என்கிறது புள்ளி விவரம். ஆனால் தினசரி நாம் மெட்ரோ வேலைகளிலும், கட்டட வேலைகளிலும் ஈடுபடும் வட இந்திய தொழிலாளர்கள் எந்த கணக்கில் இருக்கிறார்கள். இவர்களுக்கு யார் பொறுப்பு, இவர்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என பல கேள்விகளை எழுப்புகிறது இந்த புள்ளிவிவரம். 

இவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமா? இனியாவது கல் அறைகள் கல்லறைகளாக மாறாமல் இருக்குமா?

கட்டடங்கள்


டிரெண்டிங் @ விகடன்