வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (27/09/2017)

கடைசி தொடர்பு:10:15 (27/09/2017)

ஸ்பின் பண்ணி என்கூட விளையாடுங்க..! கூகுளின் பர்த்டே ஸ்பெஷல்..!

இன்று பிறந்தநாள் காணும் கூகுள், நம்மை உற்சாகப்படுத்தும் வகையில், கூகுள் டூடுளில் விதவிதமான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளது

இன்று கூகுளுக்கு 19-வது பிறந்தநாள். கூகுள் டூடுளில் முக்கியமான தலைவர்களின் பிறந்தநாளுக்காக வித்தியாசமாக வடிவமைக்கப்படுவது வழக்கம். அதேபோன்றுதான் இன்றும் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தன்னைப் புதுமாதிரியாக வடிவமைத்துள்ளது கூகுள்.

பிறந்தநாள்

கூகுள் 19-வது பிறந்தநாளைக் கொண்டாட, கூகுளை கிளிக் செய்தால், நாமும் அதோடு சேர்ந்து விளையாட்டு, பாட்டு போன்று விதவிதமாக விளையாடி மகிழலாம். இவை அனைத்தும் ஸ்பின்மூலம் தேர்வுசெய்யப்படுகிறது. இந்த விளையாட்டு சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரையுமே நிச்சயம் கவரும். இப்படி கிரியேட்டிவ் ஐடியாக்களை உருவாக்குவதில் கூகுளை மிஞ்சுவதற்கு முடியாது. இதனால்தான் மக்கள் கூகுளை அதிகம் விரும்புகிறார்கள். சர்ப்ரைஸ் ஸ்பின்னை கிளிக் பண்ணுங்க.. விளையாடுங்க..

ஹேப்பி பர்த்டே கூகுள்..!

நீங்க எப்படி பீல் பண்றீங்க