Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரே ஒரு பெண் போராளியிடம் பணிந்த சவுதி அரசு!

லகிலேயே பெண்களுக்கு கார் ஓட்டத் தடை விதித்திருந்த ஒரே நாடு, சவுதி அரேபியா. தந்தை, சகோதரர், கணவர், மகன் துணையுடன்தான் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்ல முடியும். கடந்த 1990-ம் ஆண்டு முதல், பெண்கள் அமைப்பினர் பல்வேறு உரிமைகளுக்காக அந்த நாட்டில் போராடிவருகின்றனர்.

பெண் போராளி லாஜென் அல்ஹாத்லுல்

சவுதியில், பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கவேண்டி, லாஜென் அல் ஹாத்லுல் என்கிற 28 வயது பெண், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார். 2014-ம் ஆண்டு, சவுதியிலிருந்து பக்கத்து நாடான அமீரகத்துக்கு இவர் கார் ஓட்டிச் செல்ல முயன்றார். அவரைக் கைது செய்து 73 நாள்கள் சிறையில் அடைத்தது சவுதி அரசு. 

பெண்கள் உரிமைக்காகப் பல அமைப்புகள் போராடினாலும் லாஜென் அல் ஹாத்லுல் போராடிய விதம்தான் சவுதி அரசுக்குக் குடைச்சலாக இருந்தது. கடந்த ஜூன் மாதம், தமாம் விமான நிலையத்தில் இவர் காரணமே இல்லாமல் கைதுசெய்யப்பட்டார்.  இவரின் வழக்கறிஞரைக்கூட சந்திக்க அனுமதிக்கவில்லை என 'Amnesty International ' அமைப்பு சவுதி அரசுமீது குற்றம் சாட்டியது. 

தற்போது, ஹாத்லுல் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. சவுதி அரேபிய அரசு, பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கியுள்ளது. 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள். எனினும், லைசென்ஸ் வழங்குவது குறித்து தனியாக கமிட்டி அமைத்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு மைதானத்தில்  பெண்கள்

சவுதி மன்னர்  சல்மான், பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மானை நியமித்த பிறகு, பெண்களுக்குச் சாதகமாகப் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுவருகிறது. ரியாத்தில் உள்ள கிங் ஃபாத் விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் மட்டுமே விளையாட்டுப் போட்டிகளை ரசிக்க முடியும். செப்டம்பர் 23-ம் தேதி, இந்த மைதானத்தில் சவுதி அரேபியாவின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, முதன்முறையாக கிங் ஃபாத் மைதானத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டது.  பெண்கள், கலை நிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். 

சவுதியில், 2015-ம் ஆண்டுதான் பெண்களுக்கு வாக்குரிமையும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும் அனுமதி அளிக்கப்பட்டது. தேர்தலில், 19 பெண்கள் வெற்றிபெற்றனர். தேர்தலில் போட்டியிட லாஜென் அல் ஹாத்லுல் முயன்றார். அவரைப் போட்டியிட சவுதி அரசு அனுமதிக்கவில்லை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement