Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

படகுகளை மீட்டு வர இலங்கை சென்றது தமிழக மீனவர்கள் குழு!

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் படகுகள்

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 படகுகளை மீட்க  53 பேர் கொண்ட மீனவர்கள் குழு இன்று காலை இலங்கை சென்றது.

எல்லை தாண்டியதாகக்கூறி இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அந்நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் நிறுத்திவைத்துள்ளது. இந்நிலையில் படகுகளை விடுவிக்கக்கோரி மத்திய- மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக மீனவர்கள் பல்வேறு கட்டமாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து முதல் கட்டமாக 2015ம் வருடம் சிறைப்பிடிக்கப்பட்ட  ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 42 விசைப்படகுகளை மட்டும் விடுதலை செய்ய  இலங்கை நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து விசைப்படகுகளை மீட்கவும், பார்வையிடுவதற்கும் கடந்த மாதம் 17 பேர் கொண்ட அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் கொண்ட  குழு இலங்கை சென்றது. 42 விசைப்படகுகளில் 10 விசைப்படகு  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த 10 விசைப்படகுகளில் 3 விசைப்படகுகள் சேதமடைந்துள்ளதால் 7 விசைப்படகுகளை மட்டும் மீட்க அரசு உத்தரவிட்டிருந்தது, இதைத்தொடர்ந்து இன்று காலை மண்டபம் வடக்கு துறைமுகத்திலிருந்து 7 விசைப்படகுகளில் 53 பேர் கொண்ட மீனவர்கள் இலங்கை புறப்பட்டனர்,

இலங்கை சென்ற மீனவர்கள் குழு

இவர்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் சர்வதேச கடல் எல்லைவரை அழைத்துச் சென்று பின் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அதைத் தொடர்ந்து மீனவர்களை இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்க்காவல்துறை மற்றும் கிராஞ்சி துறைமுகங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டு 3 தினங்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement