வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (27/09/2017)

கடைசி தொடர்பு:13:40 (27/09/2017)

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குப் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல தடை!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குப் பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்ல தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. ஆளும் அ.தி.மு.க அரசு, மாவட்டம்தோறும் நூற்றாண்டு விழா நடத்திவருகிறது. இந்த விழாக்களில், தமிழக முதல்வர், துணை முதல்வர் உட்பட அமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர். 

இந்த விழாக்களில், எம்.ஜி.ஆர் புகைப்படக் கண்காட்சிகளும் அதன் பின்னர், நூற்றாண்டு மாநாடும் நடைபெறும். இந்த விழாவில், பள்ளி மாணவ- மாணவியர்களை அனுப்புவது சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குப் பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்ல தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குப் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச்செல்ல தமிழக அரசுக்குத் தடை விதித்ததோடு, வரும் 30-ம் தேதி அன்று சேலத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழாவுக்கும் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல அனுமதி மறுத்து உத்தரவிட்டது.