எப்படி இருக்கிறார் பேராசிரியை ஜெனிபா? மருத்துவர்கள் விளக்கம் | Madurai kamarajar university professor health is stable now

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (27/09/2017)

கடைசி தொடர்பு:13:43 (27/09/2017)

எப்படி இருக்கிறார் பேராசிரியை ஜெனிபா? மருத்துவர்கள் விளக்கம்


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த பேராசிரியை ஜெனிபா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில், இதழியல்துறையின் தலைவர் ஜெனிபாவை, ஜோதிமுருகன் என்ற முன்னாள் கெளரவ விரிவுரையாளர், நேற்று காலை கத்தியால் குத்தினார். அதைத் தொடர்ந்து, ஜெனிபா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . கத்தியால் குத்திய ஜோதிமுருகன், நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே பேராசிரியை உடல் நிலை குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டபோது, ஜெனிபா உடலில் 15 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் கழுத்து, முதுகு உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டு ஜெனிபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், ஜெனிபாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து எதுவும் இல்லை'' என்று தெரிவித்தனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, ''ஜெனிபா நல்லபடியாக உள்ளார்; பயப்படத் தேவையில்லை. ஜெனிபா ஒரு சில நாளில் பூரண குணமடைவார். பல்கலைக்கழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. நேற்று, வேலைவாய்ப்பு முகாம் நடந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ஜோதிமுருகன் இப்படிச் செய்துள்ளார். இனி, இதுபோன்ற தவறுகள் நடக்காதபடி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அனைவரிடமும் அடையாள அட்டை காண்பித்த பின்தான் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்தார் .