Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைகோமீது தாக்குதல் முயற்சி: இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட ம.தி.மு.க!

Chennai: 

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா.சபை மாநாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர், லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலைக்குக் காரணமான இலங்கை அரசுமீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, அவரைச் சிங்களர்கள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ம.தி.மு.க போராட்டம்

இதற்கு, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சிங்களர்களின் நடவடிக்கையைக் கண்டித்து, ம.தி.மு.க துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில், நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையிலிருந்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, இலங்கைத் தூதரகத்தை நோக்கி கோஷங்களை எழுப்பியபடி, ஊர்வலமாகச் சென்ற 100-க்கும் மேற்பட்ட ம.தி.மு.க-வினரைத் தடுத்து நிறுத்தி, போலீஸார் கைது செய்தனர். அப்போது, சிறிசேனாவின் படத்தை எறித்தும், செருப்பில் அடித்தும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ம.தி.மு.க போராட்டம்

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, "வைகோமீது தாக்குதல் நடத்த முயன்ற சிங்களப் பேரினவாதிகளைக் கைது செய்ய வேண்டும். இந்திய அரசாங்கம் டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement