Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரி அரசு விழாவில் இந்தியில் எழுதப்பட்ட பேனர் கிழிப்பு - 30 பேர் கைது

புதுச்சேரியில் நடைபெற்றுவரும் கலாசார விழாவில், தமிழைத் தவிர்த்து, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை கிழித்த தமிழ் அமைப்பினரை காவல்துறை கைதுசெய்தது.

போராட்டம்

 

புதுச்சேரி கடற்கரையில், கலை மற்றும் திறன் மேம்பாட்டு இந்தியச் சந்தையைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.09.2017) அன்று மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தொடங்கிவைத்தார். ஒரு வாரம் நடைபெறும் அந்தக் கண்காட்சியில் பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநில உணவு வகைகளும், கைவினைப்பொருள்களும் விற்பனையில் இடம்பெற்றிருக்கின்றன. வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காக, அனைத்து மாநில உணவுகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்ட அந்தக் கண்காட்சிக்கு, "ஹூனார் ஹட்" என்று பெயரிடப்பட்டிருந்தது.

போராட்டம்

அதற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களில், அந்தப் பெயர் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்தது.  இன்று காலை, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் அமைப்பினர், கண்காட்சித் திடலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் முற்றுகையில் ஈடுபட்டிருந்த தமிழ் அமைப்பினர், அந்த விளம்பர பேனர்களைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, சுமார் 30-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்பினரைக் காவல்துறை கைதுசெய்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement