Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2,500 அடி உயரம் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம்செய்த கே.என்.நேரு!

கே.என்.நேரு என்ற சிறந்த அரசியல்வாதியைத் தெரியும். தி.மு.க-வில் இருந்தாலும் அவர் சிறந்த ஆன்மிகவாதியும்கூட.  சமீபத்தில் 2,500 அடி உயரத்தில் உள்ள  தலைமலை நல்லேந்திர பெருமாள் கோயிலில் ஏறி சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். 

மலை பயணத்தில் திமுக தொண்டர்கள்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று, கே.என்.நேரு பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். இந்தக் கோயில், பழம்பெருமை வாய்ந்த வைணவக் கோயில் ஆகும். 2,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கும் செல்வது கடினம். மிகவும் செங்குத்தான ஏற்றங்களைக் கொண்டது. மலைப் பாதையில் 7 கிலோ மீட்டர் தொலைவு நடந்தும் செல்ல வேண்டும். ஆனாலும், நேரு மனம் தளராமல் பெருமாளைத் தரிசிக்க மலை ஏறிச் சென்றார்.

சாமி விபூதி

கோயிலை அடைந்ததும் நல்லேந்திர பெருமாளுக்குச் சிறப்பு வழிபாடு நடத்தினார். கோயில் பூசாரி அளித்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டார். பிரசாதமும் பெற்றுக்கொண்டார். நடந்து வந்த களைப்புத் தீர, கே.என். நேரு கோயிலில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். தொடர்ந்து, கே.என். நேரு மற்றும் அவருடன் சென்றத் தொண்டர்கள் மீண்டும் தரைப் பகுதிக்கு வந்தடைந்தனர். 

கோயில் வளாகத்தில் ஓய்வு

இதற்கு முன்னர் திருநெடுங்குளம் சிவன் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் யாகசாலை முன் கே.என். நேரு அமர்ந்து ஓய்வு எடுத்த காட்சிகளும் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

கே.என். நேருவுவைப் பற்றி அறிந்தவர்கள் கூறுகையில்,  ''தி.மு.க-வின் கொள்கைப் பிடித்திருந்தாலும், அடிப்படையில் அவர்  ஒரு ஆன்மிகவாதி. அடிக்கடி கோயில் குளம் என்று, சென்றுகொண்டுதான் இருப்பார். எந்த வேலைத் தொடங்கினாலும் சாமி கும்பிடாமல் தொடங்கியது கிடையாது. அடிக்கடி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று கிரிவலம் போகும் வழக்கமும் நேருவுக்கு உண்டு. கோயில்களுக்கு நன்கொடையை அள்ளி வழங்குவார். சகோதரர் கொல்லப்பட்ட பின்னர் அவரின் ஆன்மிக நாட்டமும் அதிகரித்துள்ளது. மனத்துயரைக் குறைக்கும் வகையில் இதுபோன்று கோயில் குளங்களுக்குச் செல்கிறார் '' என்கின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement